அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
பின்னர் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.