பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ், நிதி நெருக்கடிக்கு விரைவில் தீர்வு எட்டப்படுவதை உறுதி செய்யும் முயற்சியில் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கொய்ஸ் பேக்டெட் தெரிவித்துள்ளார்.
இலங்கை உட்பட அனைத்து தரப்பினரின் நலன் கருதி உடனடி தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டவுடன் பிரான்ஸின் கடன் திட்டங்கள், மீள ஆரம்பிக்கப்படும் என தூதுவர் குறிப்பிட்டார்.
பாரிஸ் கிளப் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையின் விடயத்தில் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பாரிஸ் கிளப் நாடுகள், இலங்கையின் கடன் மீது, 10 வருட கால அவகாசத்தையும் மேலும் 15 வருட கடன் மறுசீரமைப்பையும் முன்மொழிந்திருந்தன.
இந்தநிலையில், விரைவில் ஒரு தீர்வுக்கு வருவதற்காக ஏனைய கடன் வழங்குநர்களை தீவிரமாக அணுகி வருவதாகவும் பேக்டெட் தெரிவித்தார்.