deepamnews
இலங்கை

நாட்டை வந்தடையவுள்ள 14 நிலக்கரி கப்பல்கள்

ஏற்கனவே கோரப்பட்ட விலைமனுவிற்கு அமைய, 14 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை 5 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் நாமல் ஹேவகே குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் நிலக்கரியை கொண்டுவருவதற்கான விலைமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, வேறு முறைமையின் மூலம் மேலும் மேலும் 12 நிலக்கரி கப்பல்களை நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது

3 நிலக்கரி கப்பல்கள் மூலம் 3 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர்  குறிப்பிட்டார்.

அத்துடன் மேலும் 28 நிலக்கரி கப்பல்களை கொண்டுவர தயாராகுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவோம் –  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

videodeepam

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டார்.

videodeepam

மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் – ஜனாதிபதி நம்பிக்கை

videodeepam