deepamnews
இந்தியா

தமிழ்நாடு ஆளுநரின் சர்ச்சை கருத்து –  6 மொழிகளில் பதிலடி கொடுத்தார் கமல்ஹாசன்

சென்னை – கிண்டியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது.

தமிழ்நாட்டில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன.

இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. தமிழ்நாடு என்று சொல்வதை விட ‘தமிழகம்’ என்று சொல்வதே சரியாக இருக்கும்’ என்றார்.

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுநரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஆளுநரின் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 6 மொழிகளில் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் ‘தமிழ்நாடு வாழ்க’ என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

மக்களின் முன்பாக தலைவணங்குகிறேன் – குஜராத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி உருக்கம்

videodeepam

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்.

videodeepam

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 05 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தழிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியொன்று இடம்பெறவுள்ளது.

videodeepam