deepamnews
சர்வதேசம்

ஒருதலைப்பட்ச போர் நிறுத்த அறிவிப்பின் பின்னர் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக யுக்ரைன் குற்றச்சாட்டு

ரஷ்யா, ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பு விடுத்த பின்னர், மீண்டும் யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பழைமைவாத நத்தார் பண்டிகையை முன்னிட்டு, நேற்று வெள்ளிக்கிழமை முதல 36 மணித்தியாலங்கள் போர் நிறுத்தம் செய்யதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று அறிவித்திருந்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர் ரஷ்யா இவ்வாறு போர் நிறுத்தத்தை அறிவித்தமை இதுவே முதல் தடவையாகும்.

எனினும், இந்த போர் நிறுத்தத்தை யுக்ரைன் நிராகரித்திருந்தது.

இந்நிலையில், யுக்ரைனின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள க்ராமடோர்க்ஸ்க் நகரில் ரஷ்யா நேற்று  இரு தடவைகள் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக யுக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

துபாயில் புர்ஜ் கலிபா அருகிலிருந்த 35 மாடி கட்டடம் தீக்கிரை

videodeepam

பாலியல் உறவு போட்டியை நடத்த தயாராகும் சுவீடன்

videodeepam

சீன இராணுவம் யுத்தத்திற்கு தயார் –  மூன்று நாள் ஒத்திகையின் பின்னர் அறிவிப்பு

videodeepam