deepamnews
இலங்கை

புலிகளின் கைபொம்மையாக கனடாக செயற்படுகிறது என்கிறார் சரத் வீரசேகர

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோர் மீது பொருளாதாரத் தடையை கனடா விதித்துள்ளமைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, புலிகளின் கைபொம்மையாக கனடாக செயற்படுவதாகவும் குற்றஞ்சுமத்தினார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோர் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், சுனில் ரத்னநாயக்க, சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமென கனடா கூறுகிறது. ஆனால் இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமல்ல எனவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்தவும், கோட்டாவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் தனிப்பட்டவகையில் அவர்களுக்கு இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருக்கிறதா? பிரிவினை வாதிகளை சந்தோஷப்படுத்துவதற்காக இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுனில் ரத்னாயக்கவுக்குக் கிடைக்கப்பெற்ற பொதுமன்னிப்பை எதிர்க்கும் கனடா, முன்னாள் விடுதலைப் புலிக உறுப்பினர்களை பொதுமன்னிப்பில் விடுவிக்கும்போது மாத்திரம் ஏன் எதிர்ப்பதில்லை. எதற்காக இந்த இரட்டை நிலைப்பாடு? மனித உரிமைகளை கனடா செய்திருக்கிறது.

எனவே மனித உரிமை மீறல் தொடர்பில் பேச கனடாவுக்கு அருகதை இல்லை. சர்வதேச ரீதியில் தடைச் செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் கைப்பொம்மையாகக் கனடா இருப்பதாக வரலாற்றில் பதியப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும்

videodeepam

வர்த்தக வாகனங்கள் இறக்குமதிக்கான அனுமதி மீண்டும் இரத்து.

videodeepam

கதைவிட வேண்டாம் – முரளிக்கு மனோ உபதேசம்.

videodeepam