deepamnews
இலங்கை

கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என எஸ். ஜெய்சங்கர் உறுதி

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு அத்தியாவசியமான இந்தத் தருணத்தில், மேலும் ஒத்துழைப்பை வழங்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றும் இதன்போது அவர் கூறியுள்ளார்.

இதேநேரம், மேலும் சில அமைச்சர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது, உட்கட்டமைப்பு இணைப்பு, எரிசக்தி, தொழில் சுகாதாரம் முதலான துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சியை துரிதப்படுத்தும் வகையில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளார். அத்துடன், தமிழ்த் தரப்பு அரசியல் கட்சிகளையும் அவர் சந்திக்க உள்ளார்.

Related posts

கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்  – செல்வம் எம்.பி கோரிக்கை!

videodeepam

190 மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சர் அறிவிப்பு.

videodeepam

உள்ளூராட் தேர்தலுக்கான நிதியை மறுத்தால் நீதிமன்றம் செல்வோம் என்கிறார் ரஞ்சித் மத்தும பண்டார

videodeepam