deepamnews
இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தலைமையில் இன்று விசேட சர்வகட்சி கூட்டம்

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று  மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சர்வகட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தலைமையில் இந்த சர்வகட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், 2022 டிசம்பர் 13ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட, நல்லிணக்க முன்னேற்ற வேலைத்திட்டம் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட்டு கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடும் எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒக்டோபர் 25 ஆம் திகதி இலங்கை வரும் சீன ஆய்வுக் கப்பல்.

videodeepam

இந்து மதத்தின் தனித்துவத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை ஆராய வேண்டும் – ஜனாதிபதி

videodeepam

13வது சீர்திருத்தம் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய தமிழ் கட்சிகள்.

videodeepam