deepamnews
சர்வதேசம்

உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்யா மீதான தடைகளை கடுமையாக்கியுள்ள ஜப்பான்

உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்யா மீதான தடைகளை ஜப்பான் கடுமையாக்கியுள்ளது.

இதற்கமைய, ரஷ்யாவிற்கான ஏற்றுமதித் தடைகளை வலுப்படுத்தவும் ரஷ்ய அதிகாரிகள் மற்றும் சொத்துகளை முடக்கவும் ஜப்பான் நடவடிக்கை எடுத்துள்ளது.

ரஷ்ய தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு உதவும் யுத்த தாங்கிகளை வழங்குவதாக ஜெர்மனியும் அமெரிக்காவும் உறுதியளித்துள்ளன.

இதனிடையே,  ரஷ்யாவால் உக்ரைனில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் சுமார் 11 பேர் கொல்லப்பட்டுள்னர்.

இந்நிலையில், உக்ரைனை சுற்றிய பிராந்தியத்தில் அமைதியை பாதுகாப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு பங்களிக்கும் வகையில், தமது நாடு ஏனைய மேற்குலக நாடுகளுக்கு ஏற்ப ஏற்றுமதித் தடைகளை அமுல்படுத்துமென ஜப்பான் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ரஷ்யாவிற்கான ரோபோக்கள், தடுப்பூசிகள், நீர்த்தாரை பிரயோக தாங்கிகள், ஆய்வுக் கருவிகள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதிகளில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

Related posts

கனடாவில் வலிமையான துப்பாக்கி கட்டுப்பாட்டு

videodeepam

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் தலிபான்களால் கைது

videodeepam

ரஷ்யாவிடம் இருந்து கெர்சன் பகுதியை மீட்ட உக்ரைன் – கொண்டாட்டங்களில் ஈடுபட்ட  பொதுமக்கள்

videodeepam