deepamnews
இலங்கை

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுமா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடலொன்று இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் இன்று  தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன.

கட்டணம் செலுத்தப்படாவிட்டால் தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாதென அரச அச்சகர் அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்தல்களின் போது, வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்தப்பட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களிலும் வாக்களிப்பு இடம்பெற்றதன் பின்னரே கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக 13 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி உதயம்

videodeepam

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் முதலாவது பேச்சு நாளை ஆரம்பம்

videodeepam

உள்ளூராட்சி தேர்தலிற்கான போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்கிறார் அனுரகுமார திசநாயக்க

videodeepam