deepamnews
இந்தியா

ஆளுநருக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டத்தை பாமக நடத்தும் – அன்புமணி ராமதாஸ் தெரிவிப்பு

ஒன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு சட்டம் இயற்றி 5 மாதங்கள் ஆகும் நிலையில், அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த மக்களையும் அவமதிக்கும் செயல் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சத்தை இழந்த சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் சுரேஷ் என்பவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த மனைவியும், இரு குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். அவர்களுக்கு எனது ஆறுதல்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் இருவர் பலியாகியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 45-ஆவது தற்கொலை இது. புதிய சட்டம் இயற்றப்பட்ட 139 நாட்களில் 16 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.  

ஒன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு சட்டம் இயற்றி 5 மாதங்கள் ஆகும் நிலையில், அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த மக்களையும் அவமதிக்கும் செயல். இதைவிட மனிதநேயமற்ற நடவடிக்கை எதுவும் இருக்க முடியாது.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆளுநருக்கு எதிரான மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பாமக நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Related posts

66 குழந்தைகளின் மரணத்துக்கு காரணமான சளி மற்றும் இருமல் மருந்து குறித்து விசாரணையை தொடங்கியது இந்தியா

videodeepam

மக்களின் முன்பாக தலைவணங்குகிறேன் – குஜராத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி உருக்கம்

videodeepam

தமிழ் மொழியைக் காக்க வேண்டியது இந்திய மக்கள் அனைவரின் கடமை – பிரதமர் மோடி தெரிவிப்பு

videodeepam