deepamnews
இந்தியா

புதிய பாராளுமன்ற கட்டடம் புதிய இந்தியாவை உருவாக்கும் – பிரதமர் மோடி நம்பிக்கை

இரண்டு ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழா, ஒரு நாட்டின் நாகரீக வரலாற்றை எடுத்துரைக்கும் ஒரு தருணத்தை குறிக்கிறது.

அதே நேரத்தில், மிகவும் வளமான மற்றும் சமமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகால சுதந்திரப் போராட்டத்தின் தீர்க்கமான கட்டத்தின் போது காணப்பட்ட தேசிய நனவின் விழிப்புணர்வை இந்தியா காண்கிறது. அந்தக் கட்டிடத்தை மீண்டும் ஒரு ‘புதிய இந்தியாவின்’ அடையாளமாகக் காட்டி, அதை தனது அரசாங்கத்தின் நலன்புரி விநியோகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான 21 எதிர்க்கட்சிகள், குடியரசுத் தலைவரை அழைக்காததன் மூலம்;, கடுமையான அவமான செயல் என்று எதிர்ப்புத் தெரிவித்து விழாவில் பங்கேற்கவில்லை.

புதிய கட்டிடத்தில் தனது முதல் உரையை ஆற்றிய பிரதமர் மோடி, புதிய கட்டிடம் 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகள் மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பாகும். நாட்டின் உறுதியைப் பற்றிய செய்தியை உலகுக்கு உணர்த்துவதாகவும் ‘தேசியப் பெருமை’ உணர்வை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

Related posts

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் அறிவியலுக்கான பார்வை சுட்டிக்காட்டினார் பிரதமர் மோடி

videodeepam

மரண தண்டனை நிறைவேற்ற மாற்று வழிகளை ஆராயுமாறு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு

videodeepam

நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்தின் படிப்பிடிப்புக்கள் இலங்கையில் இடம்பெறும் சாத்தியம்

videodeepam