deepamnews
சர்வதேசம்

சிங்கப்பூர் ஜனாதிபதியாக யாழ்ப்பாண தமிழர்!

யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கு மேலான  வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும் துணை பாதுகாப்பு அமைச்சராகவும் துணை பிரதமராகவும் பதவி வகித்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு போட்டியாக ஜனாதிபதி வேட்பாளராக இருவர் களமிறங்கிய நிலையில் இருவரும் 20 வீத வாக்குகளை கூட பெறாத நிலை காணப்பட்டது.

இவரது தாய் யாழ்ப்பாண ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கரடியின் முக அமைப்பு இருப்பது போன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

videodeepam

பெரு ஜனாதிபதி நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பதவி நீக்கம்

videodeepam

இஸ்ரேலில் வரலாறு காணாத மக்கள் போராட்டம் – பிரதமரின் அதிரடி திட்டம்

videodeepam