deepamnews
இலங்கை

புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் முடிவு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தில் சில திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ கடந்த 23 ஆம் திகதி புனர்வாழ்வு பணியகத்தை உருவாக்குவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அந்த சட்டமூலம் நாட்டை இராணுவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்றும், அது அரசியலமைப்புக்கு முரணானது என்றும்  தீர்ப்பளிக்குமாறு கோரி, சட்டத்தரணி அமில எகொடமஹவத்த உயர் நீதிமன்றத்தில் விசேட மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

மேலும், குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், எஸ்.எம்.மரிக்கார் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

குறித்த மனுக்கள், நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர், புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தில் சில திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக மன்றுக்கு அறிவித்தார்.

Related posts

உயர்தர மாணவி குளியலறையில் இருந்து சடலமாக மீட்பு!

videodeepam

 தெல்லிப்ழை துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம்.

videodeepam

தேர்தலுக்கு நிதியில்லை என்பது  ஜனாதிபதியின் அரசியல் சூழ்ச்சி –  அநுர குமார திஸாநாயக்க குற்றச்சாட்டு

videodeepam