deepamnews
இலங்கை

உயர்தர பரீட்சையை பிற்போடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையை பிற்போடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படவுள்ளது. கொழும்பில் இன்றைய தினம்(04) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையை எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பரீட்சையை பிற்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சியின் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சையை பிற்போடுவதற்கு எவ்வித தேவையும் ஏற்படவில்லை என கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையை பிற்போடாதிருக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Related posts

நல்லை கந்தனின் திருமஞ்சத்தை காண திரண்டு வந்த பக்தர்கள்!

videodeepam

கடும் வறட்சி. ஜம்போ கச்சான் விளைச்சலில் வீழ்ச்சி.

videodeepam

சர்வதேச ரோட்டரி கழக தலைவர் இலங்கைக்கு விஜயம் – மருந்து பொருட்களும் அன்பளிப்பு

videodeepam