deepamnews
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்காக 1,000 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கிய சீனா

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 1000 மெற்றிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலிலிருந்து அரிசியைத் தரையிறக்கும் பணிகள் நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள அரிசி தொகை, பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கும் வேலைத்திட்டத்திற்காக வழங்கப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது சுமார் 8,000 மெற்றிக் தொன் அரிசியை பாடசாலை மாணவர்களுக்காக சீனா நன்கொடையாக வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை சீன அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 9,000 மெற்றிக் தொன் டீசல் கடந்த வாரம் நாட்டை வந்தடைந்ததோடு , அவை மீன்பிடி மற்றும் வலுசக்தி அமைச்சு உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வட்டக்கச்சி பாலசிங்கம் யுகதீபன் பெலராஸில் சடலமாக மீட்பு.

videodeepam

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கை -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

videodeepam

நெடுந்தீவு கோர படுகொலை – ஒருவர் கைது.

videodeepam