deepamnews
இலங்கை

காங்கேசன்துறை – காரைக்கால் இடையே போக்குவரத்து சேவை

காங்கேசன்துறை- காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காங்கேசன்துறையில் பயணிகளுக்கான சுங்க மற்றும் குடிவரவு – குடியகல்வு சாவடியை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கப்பல் சேவையை ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ என்ற நிறுவனம் நடத்தவுள்ளது.

முதலில் 120 பயணிகள் இந்தக் கப்பலில் பயணிப்பார்கள் எனவும் அவர்கள் 100 கிலோ பொருட்களை தம்முடன் எடுத்துச் செல்ல முடியும் என்பதோடு ஒருவருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபா வரிக் கட்டணமாக அறவிடப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கட்டாகாளி கால்நடைகளால் வீதிவிபத்து அதிகரிப்பு

videodeepam

இறுதிக்கட்ட யுத்தத்தில் இரசாயனக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை – சரத் வீரசேகர தெரிவிப்பு

videodeepam

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

videodeepam