deepamnews
சர்வதேசம்

புளோரிடாவை சூறையாடிய ஐயான் சூறாவளி

ஐயான் சூறாவளி புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

புயல் நேற்றுமுன்தினம் கரையை கடந்த போது மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி உள்ளது.

இதனால் பாரியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

சுமார் 2.6 மில்லியன் மக்கள் மக்கள் மின்சாரமின்றி தவிக்கின்றனர்.

இது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், புளோரிடாவே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

பேரழிவு மாநிலமாக அது அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் குழு மற்றும் 300 நோயாளர் காவு அமெரிக்க அரசு அனுப்பியுள்ளது.

மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கிறது.

புளோரிடா மக்களுக்கு  துணையாக அமெரிக்க அரசு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் புயல் கியூபாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 11 மில்லியன்  மக்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவதிப்படுகின்றனர்.

Related posts

உலக சாதனை படைத்த வெங்காயம்.

videodeepam

உக்ரைனுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை! – குற்றம் சாட்டுகிறார்  ஜெலன்ஸ்கி.

videodeepam

திருமணத்துக்குப் புறம்பான பாலியல் உறவுக்குத் தடை – இந்தோனேஷிய நாடாளுமன்றில் சட்டமூலம் நிறைவேறியது

videodeepam