deepamnews
இலங்கை

இந்தியாவிற்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இலங்கைக்கும் அச்சுறுத்தல் தான் – மிலிந்த மொறகொட

இந்தியாவிற்கு ஏற்படும் எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலும் இலங்கைக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் என்று இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.

எந்த வகையிலும் வெளிநாட்டு ஒன்று இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக, துறைமுகங்களை பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்றும் அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பல் நிறுத்தப்பட்ட அண்மைய  சர்ச்சை குறித்த  கேள்விக்கு பதிலளித்த மொறகொட, அவ்வாறான பிரச்சினைகளுக்கு இரு நாடுகளும் தீர்வு காண அனுமதிக்கும் பொறிமுறையை இறுதி செய்ய இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.

இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பு நடந்தவுடன் புவிசார் அரசியல் பிரச்சினைகள் தாமாகவே தீர்க்கப்படும்.

நிச்சயமாக, அதுவரை நாம் பேச்சுவார்த்தை, புரிதலை வளர்த்து, சிவப்புக் கோடுகளைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தத்தின் கீழ் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை போதுமான அளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா கூறியுள்ளமை குறித்த கேள்விக்குப் பதிலளித்த மிலிந்த மொறகொட,  இந்திய அரசாங்கம் கூறியதில் புதிதாக எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

“நுணுக்கம் மாறியிருக்கலாம், ஆனால் சாராம்சத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது.

அரசியல் ரீதியாக, இலங்கை ஒரு நிலைமாறும் கட்டத்தில் உள்ளது.

நாட்டில் சமூக மற்றும் அரசியல் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

இலங்கை ஒரு சிக்கலான நாடு. பல மதங்கள் மற்றும் இனங்களைக் கொண்டது.  13வது திருத்தம் குறித்த விடயமும், அதன் கீழ் தான் வருகிறது. நாம் ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

யாழில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

videodeepam

இனவாதத்தை கையில் எடுக்கிறது ரணில், ராஜபக்ச அரசு – ஜே.வி.பி. சந்திரசேகரன் கவலை.

videodeepam

இராணுவத்தினரால் புதிய வீடு கையளிப்பு!

videodeepam