deepamnews
இலங்கை

நாட்டில் சுதந்திரத்துடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது – ஜனாதிபதி

ஒருமாத நோன்பு காலத்தின் பின்னர் நாட்டில் உருவாகியுள்ள ஆறுதலான சூழலில் முஸ்லிம்கள் ரமழான் பண்டிகையை கொண்டாடி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ரமழான் விசேட செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

நோன்பு காலம் மற்றும் ரம்ஜான் பண்டிகை மதிப்புமிக்க சமய, ஆன்மீக மற்றும் சமூக விழுமியங்களை உள்ளடக்கியது என்றும், இஸ்லாமிய பக்தர்கள் நோன்பு காலங்களில் கூட நடைமுறைகளை மிகுந்த பக்தியுடனும் நேர்மையுடனும் கடைப்பிடிக்க தங்களை அர்ப்பணிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ரமழான் நோன்பு காலத்தை கழிப்பதற்கு மட்டுமன்றி சமூகத்தில் உள்ள ஏனைய மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கும், தர்மம் மற்றும் சமத்துவம் பற்றிய செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்வதற்கும் இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம் என ஜனாதிபதி கூறுகிறார்.

சமாதானத்துடனும் சகோதரத்துவத்துடனும் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகளில் இந்த சமூகக் கோட்பாடுகள் சிறந்த இலட்சியமாக இருப்பதாகவும், சமூக நல்வாழ்வுக்காக அது வழங்கிய செய்தியை நடைமுறைப்படுத்த நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், எமது தாய்நாட்டை சுபீட்சத்திற்கு இட்டுச் செல்லவும், சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புகள் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் இன, மத பேதமின்றி ஒரே இலங்கையர்களாக ஒன்றிணைவதற்கு இவ்வருட ரமழான் கொண்டாட்டம் ஆசீர்வாதமாக அமைய பிரார்த்திப்பதாக இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளும் அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடட்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்திய இழுவைப் படகுகளின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

videodeepam

சனிக்கிழமை முதல் முட்டை விலை குறைகிறது – அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானம்

videodeepam

2023 ஆம் ஆண்டு புதிய வருட பிறப்பு இன்று – மக்கள் வான வேடிக்கைகளுடன் வரவேற்பு

videodeepam