deepamnews
சர்வதேசம்

திட்டமிட்டப்படி இராணுவ உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் – வடகொரியா அறிவிப்பு

திட்டமிட்டப்படி இராணுவ உளவு செயற்கைக்கோள் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்துள்ளது.

எதிர்வரும்  11 ஆம் திகதிக்குள் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என வடகொரியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜப்பான் அரசாங்கத்திற்கு வடகொரியா அனுப்பிய அறிவித்தலில், இராணுவ உளவு முயற்சியின் அங்கமாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தில் அனுப்ப இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்சின் கிழக்கு பகுதியில் உள்ள லூசோன் தீவுகளில் கடல்நீரை பாதிக்கச் செய்யலாம் என்றும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜப்பான், தமது நாட்டு எல்லைக்குள் வடகொரிய ஏவுகணை நுழைந்தால், அதனை உடனடியாக சுட்டு வீழ்த்த ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கம் இருந்து வடகொரிய சுமார் 100 ஏவுகணைகளை சோதனை செய்து இருக்கிறது.

இந்த சோதனைகள் தென் கொரியா மற்றும் தமது கடற்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்காவின் பொருளாதார  தடை நடவடிக்கைக்கு ரஷ்யா பதிலடி

videodeepam

3500 ஐ தாண்டியது உயிர் பலி – எட்டு மடங்காக அதிகரிக்கலாமென எச்சரிக்கை

videodeepam

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,300 ஆக அதிகரிப்பு

videodeepam