deepamnews
இலங்கை

அமெரிக்க புறப்பட்டது அரசாங்க குழு- சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தும்

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசாங்கக் குழுவொன்று நேற்று வொஷிங்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகளைக் கொண்ட இந்தக் குழுவில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் இடம்பெற்றுள்ளார்.

வரி சீர்திருத்தங்கள் தொடர்பாக இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அரசாங்க பிரதிநிதிகள் குழு சர்வதேச நாணய நிதியத்துக்கு விளக்கமளிக்கும்.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.

தாங்கள் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னர்,தங்களின் கொள்கைகளுடன்  இலங்கை இணங்குவதற்காக காத்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பளை – முல்லையடி பகுதியில் கோரவிபத்து

videodeepam

வவுனியாவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!

videodeepam

தன்னிச்சையாக செயற்படும் அரசாங்கத்திற்கு தேர்தல் மூலம் மக்கள் பதிலடி கொடுக்க முடியும் – ஜி.எல் பீரிஸ் தெரிவிப்பு

videodeepam