deepamnews
சர்வதேசம்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக எதிர்க்கட்சியினருடன் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள், நாட்டில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

கோலாப்பாக் விளையாட்டு மைதானத்தில் திரண்ட போராட்டக்காரர்கள், ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைமை அலுவலகத்தை பாதுகாப்புப் படையினர் முற்றுகையிட்ட நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அங்கு பதற்ற நிலை உருவாகியது.

Related posts

கட்டாரின் புதிய பிரதமராக மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி பதவியேற்பு

videodeepam

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு

videodeepam

பிரித்தானியா ஒரு தசாப்த கால பொருளாதார வளர்ச்சியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை  

videodeepam