deepamnews
சர்வதேசம்

சீனாவின் மக்கள் தொகை 60 ஆண்டுகளின் பின் முதல்முறையாகக் குறைந்துள்ளது

சீனாவின் மக்கள் தொகை கடந்த 1961 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 60 ஆண்டுகளில் முதன் முறையாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் தொகை வீழ்ச்சி வீதம் ஆயிரம் பேருக்கு 6.77 என்ற வகையில் பதிவாகியுள்ளது.

சீனாவின் மக்கள்தொகை குறைந்துள்ளதுடன், தேசிய பிறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கடந்த 2022 இல் 1.4118 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது 2021 உடன் ஒப்பிடும்போது 850,000 பேர் குறைந்துள்ளதை காட்டுகிறது.

1980 இல் இயற்றப்பட்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற கொள்கையின் பிரகாரம், நாட்டின் பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாக குறைந்து வந்தது.

அந்த கொள்கை ரத்து செய்யப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும், அது இன்னும் எதிர்மறையான மக்கள்தொகை வளர்ச்சியைக் காட்டுகிறது என்று சீனாவின் தேசிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2021 தொடக்கம் 2022 வரை பிறப்பு விகிதம் 7.52 ஆகக் குறைந்துள்ளது என்று சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகம் இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பீட்டளவில், 2021 இல் அமெரிக்காவில் 1,000 பேருக்கு 11.06 குழந்தைகளும், இங்கிலாந்தில் 10.08 சதவீத பிறப்புகளும் பதிவாகியுள்ளன.

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளும் நிலையில் உள்ள இந்தியாவில் அதே ஆண்டு பிறப்பு விகிதம் 16.42 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு சீனாவில் முதன்முறையாக பிறப்பு எண்ணிக்கையை விட இறப்புகள் அதிகரித்தன. 1976 ஆம் ஆண்டிலிருந்து அதிக இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.

Related posts

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்வதற்குத் தடை

videodeepam

புடினை கொல்ல உக்ரைன் அனுப்பிய இரகசிய ட்ரோன் விமானம்:  ஜேர்மன் தகவல்

videodeepam

ஹொண்டுராஸில் பெண்கள் சிறைச்சாலையில் கடும் மோதல் – 41 பெண்கள் பலி..!

videodeepam